நியூயோர்க் நகரில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின், 72ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில், பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அல் ஹூஸைனை, நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின், 72ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 20 திகதி உரையாற்றினார்.
இந்நிலையில், அன்றையதினம், நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.