அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் கபடத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த ஜனநாயக மறுப்புக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது எனவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையானது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வறிக்கை தொடர்பாக நேற்று யாழ் ஊடக அமையத்தில் சிவில் சமூக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிவில் சமூக அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான குருபரன்,
தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வு வருமாக இருந்தால் அதனை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனத்தெரிவித்தார்.