பௌபிம மக்கள் கட்சியின் தலைவரும், தென்மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில், புதிய இடைக்கால அறிக்கையில் நாட்டின் தேசியகீதம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ‘நமோ மாதா’ எனச் சிங்களத்திலும், ‘நமோ தாயே’ எனத் தமிழிலும் தேசியகீதம் பாடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி, சிங்களத்திலும், தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்படும்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதாகத் தெரிவிப்பதில் எந்த உண்மையுமில்லை. தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே இசைக்கப்பட்டது.
தேசிய அபிமானத்தைக் கருத்திற்கொண்டும், தமிழ் மக்களை மதிப்புறுத்தும் வகையிலும் அன்று தமிழில் வேறு விதமாகப் பாடப்பட்டது. அது தேசிய கீதம் அல்ல.