துயிலிடம் இன்றித் துடித்தோம் தமிழா…
துயரது நீக்கிடத் துணிவோம் தமிழா…
காரிருள் நீக்கிய கரும்புலிச் சேனையர்
கரிகாட் தலைவனின் கட்டளை ஏற்றவர்
கடமை அறிந்தே காடையர் கிழித்தவர்
கந்தகப் புகையென காற்றில் கலந்தவர்
விடுதலை வேண்டி விருப்புடன் ஈந்தார்
விலை மதிப்பற்ற வீரப் பேருயிர்
வித்துடல் விதைத்த விளைநிலம் தேடி
வீரப் புதல்வரை விழுந்தே வணங்கிட
மாணவர் மகளிர் மக்கள னைவரும்
மானத் தமிழ்குடி மாண்போடு மரபோடு
மாழை யீழமண் மரித்த ரண்செய்த
மாவீர வேங்கையர் மலர்தாள் பணிய
துட்டம் துடைத்தவர் துங்கம் போற்றித்
துதித்துத் தொழுதிடத் துணிந்தே எழுந்தும்
துயிலிடம் இன்றி துடித்தோம் தமிழா
துயரது நீக்கிடத் துணிவோம் தமிழா….