ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கப்டன் பாரத் சிங் (91) உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்திய ராணுவத்தில் விங் கொமாண்டராக பணியாற்றிய பாரத் சிங், கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் சுட்டு வீழ்த்தினார்.
மெச்சத்தக்க விதத்தில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து வந்த பாரத் சிங் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.