கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படவேண்டுமாயின் நீர்வளச் சபையின் அனுமதி அறிக்கை பெறப்படவேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில்இ முழங்காவில் பிரதேசத்தில் ஆழ்துணைக் கிணறு ஒன்று தோண்டியதையடுத்து அருகிலுள்ள குடிமனைகளின் கிணறுகளில் நீர் வேகமாக வற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நீர் வளச் சபையின் அனுமதியின்றி எந்தவொரு ஆழ் துணைக் கிணறும்தோண்டக் கூடாது எனவும், இதற்கு மாறாக அமைக்கப்படும் கிணறுகள் அனைத்தும் மீண்டும் மூடப்படும் எனவும்முடிவெடுக்கப்பட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரணைமடுக் குளத்தையண்டிய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவதால் குளத்துநீர் பெருமளவு உறிஞ்சப்படலாம் என்ற காரணத்தினால், இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்திலெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.