தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான சின்னம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது.
இன்று (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து அதற்கான விருதைப் பெறுகின்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் கூறும்போது, கோவிலை சுத்தப்படுத்தும் திட்டம் முதலில் அதன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற கவனத்தில் தொடங்கப்பட்டது.
இது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது, மார்ச் 2018-ல் இதன் பணி முழுவதும் நிறைவடையும். இதற்காக 11.65 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டது, அதை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இப்போது வரை செய்யப்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்ற 10 இடங்களில் நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.