தமிழீழ விடுதலைப்புலிகளின் மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் மனைவியும் மாலதி படையணிப் போராளியும்,போராளி படைப்பாளியுமான சத்தியா அவர்கள் இந்தோனேயாவில் அகதி தஞ்சம் புகுந்திருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.
2009 இறுதிப்போரில் தளபதி குமரன் இராணுவத்திடம் சரனடைந்து பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு குழந்தையின் தாயான சத்தியா தனது குழந்தையுடன் கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
கடற் பயணத்தின் போது இந்தோனேசிய காவல்துறையினால் கைது செய்யப்பட்டு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சத்தியா அவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஈழத்து இலக்கிய படைப்பாளியும்,போராளியுமான சத்தியா அவர்களுக்கு அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது தாயகப் போராளிகள் சார்பில் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்