2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் படையினரிடம் உள்ள தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கும்.
மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்படவில்லை.
இந்திய அமைதிப்படை மற்றும் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட நிலங்களே அவை.
எமது ஆட்சியில் 80 வீதமான நிலங்களை ஒப்படைத்து விட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.