ஒவ்வொரு ஆண்டும் மனித நுகர்வுக்கு உலகில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பகுதி – ஏறத்தாழ 1.3 பில்லியன் டன்கள் பெறுமதியான உணவு இழக்கப்படுத்தலுக்கும் உணவு வீணாதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் (தொழில்துறை நாடுகளில்) ஏறத்தாழ 680 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவு இழப்புகளும் வீணடிப்புகளும் இடம்பெறுவதுடன் வளரும் நாடுகளில் ஏறத்தாழ 310 பில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றது.
தொழில்மயமான நாடுகளில் ஏறத்தாழ 670 மில்லியன் டன் அளவிலான உணவுப்பொருளும் வளர்முக நாடுகளில் 630 மில்லியன் அளவிலான உணவுப்பொருளும் மீள்சுழற்சிக்காக பயன்படுகின்றது.
பழங்கள் ,காய்கறிகள், வேர்கள் வகை பொருட்கள், கிழங்குப்பொருட்களே அதிகளவான உணவு இழப்புகளுக்கும் உணவு வீணடிப்புகளுக்கும் உள்ளாகின்றன.
உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு ஏறத்தாழ 30 வீதமான தனியாப்பொருட்களும் ஏறத்தாழ 40-50 வீதமான பழங்கள்,காய்கறிகள் மற்றும் வேர்ப்பொருட்களும்,ஏறத்தாழ 20 வீதமான எண்ணெய் விதைகளும் ,ஏறத்தாழ 35 வீதமான இறைச்சி மற்றும் பாற்பொருட்களும் உணவு இழப்புக்கும் உணவு வீணடிப்புக்கும் உள்ளாகின்றன .
ஒவ்வொரு ஆண்டும், பணக்கார நாடுகளில் உள்ள நுகர்வோர்,உணவின் மொத்த உற்பத்தியில் 222 மில்லியன் டன்கள் உணவுப்பொருட்களையும் , துணை சஹாரா ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள நுகர்வோர் மொத்த உற்பத்தியில் 230 மில்லியன் டன்கள் உணவுப்பொருட்களையும் வீணடிக்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இழந்த அல்லது வீணடிக்கப்பட்ட உணவின் அளவு அந்த ஆண்டின் மொத்த தானிய உற்பத்தியின் அரைவாசிக்கும் அதிகமாக உள்ளது. (2009-2010 இல் 2.3 பில்லியன் தொன்)
வளரும் நாடுகளில் 40 வீதமான இழப்புக்கள் அறுவடை மற்றும் பதப்படுத்துதல் மட்டங்களில் ஏற்பட தொழில்மயமான நாடுகளில் 40 வீதமான இழப்புக்கள் சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் ஏற்படுகின்றது.
உணவு இழப்பு,உணவு வீணடிப்பால் , நிலம், ஆற்றல், உழைப்பு மற்றும் மூலதனம் உள்ளிட்ட வளங்கள் பெரும் நட்டமடைவதுடன் புவி வெப்பமடைதலுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் காரணமாகின்றது.
இலத்தீன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வீணடிக்கப்படும் அல்லது இழக்கப்படும் உணவுகளால் 300 மில்லியன் மக்களுக்கும்
ஐரோப்பாவில் வீணடிக்கப்பட்ட உணவால் 200 மில்லியன் மக்களுக்கும்
ஆப்பிரிக்காவில் தற்போது இழந்த உணவால் 300 மில்லியன் மக்களுக்கும் உணவளிக்க முடியும்.
உலகில் தற்போது இழந்த அல்லது வீணாக்கப்பட்ட ,உணவால் உலகில் வாழும் 870 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியும்.
அறுவடை மற்றும் பதப்படுத்தலின் போது ஏற்படும் உணவு இழப்பு சிறு விவசாயிகளுக்கு வருமான இழப்பிற்கு காரணமாவதுடன் நுகர்வோருக்கான விலை ஏற்றத்திற்கும் காரணமாகின்றது.
ஆங்கிலத்தில் இருந்து கிடைக்கப்பட்ட
தகவலை
தமிழில் மொழியாக்கம்
– காவியா