தமிழர் ஒருவரின் தலைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தல் தொகுதிக்கான எல்லை நிர்ணயக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.தவலிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில், பேராசிரியர் எஸ்.எச். ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர் சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த குழுவினரே மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை வரையறை செய்யவுள்ளது.
மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.