நேற்று முன்தினம் மத்திய மாகாணசபையில் நடைபெற்ற வடமாகாணசபையில் இடைக்கால அறிக்கையை மாகாணசபை உறுப்பினர் ஒருவர் சபையின் நடுவே தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பதில் தலைவர் எஸ்.பி. ரத்நாயக்கா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றபோதே அவர் இடைக்கால அறிக்கையை கடுமையாக விமர்சித்த பின்னர் அதனை தீயிட்டு எரித்தார்.
குமார் தச நாயக்க சமர்ப்பித்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அவர் உரையாற்றுகையில், 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெள்ளை யானையாகும். அதனால் அடைய முடியாததை 20ஆவது திருத்தச் சட்டம் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் மாகாண சபை நடைமுறையில் இருந்தபோதும் அன்று பயங்கரவாதப் பிரச்சினைகள் குறையவில்லை. அன்று காத்தான் குடியில் முஸ்லிம்கள் பள்ளியில் வைத்துக் கொல்லப்பட்டனர். அரந்தலாவஇ அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி போன்ற இடங்களில் பௌத்தர்கள் அழிக்கப்பட்டனர்.தமக்கு ஆதரவு கொடுக்காத அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மகிந்த ஆட்சியில் மாவிலாறு முதல் நந்திக்கடல் களப்பு வரையான போராட்டத்தின் ஊடாகவே பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டது. இன்று அப்படியான கொலைகள் இல்லை.
எனவே இருக்கும் அதிகாரம் போதும், சமஷ்டி ஆட்சி முறைக்கு வித்திடும் 20ஆவது திருத்தச்சட்டமோ இடைக்கால அறிக்கையோ தேவையில்லை.
மூன்று பக்கத்தில் உள்ள அரசியல் சட்ட அறிக்கைக்கு 30 பக்கங்களில் திருத்தத்தைக் கொண்டுவந்து முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்ட யாப்பு மாற்று யோசனை ஒரு நாடகமாகும்.
உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்றைக் காட்டி வேறொன்றை சட்டமாக்கும் நாடகத்தை ஏற்கமுடியாது. எனவே மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் இதனை தீயிட்டுக் கொழுத்துகின்றேன் என சபை நடுவே தீயிட்டுக் கொழுத்தினார்.