மதிப்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே!! தமிழீழ செல்வங்களே!!
இன்று எம்மால் எழுதப்படும் இந்த கட்டுரையானது பல விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்றதொரு சிந்தனையில் மட்டுமே எழுதப்படுகின்றது. இந்த பதிவானது யாரும் காழ்ப்புணர்வு கொள்ளும் நோக்கிலோ அல்லது தமிழ் மக்களை பிரித்தாளும் சூதுடனோ எழுதப்படவில்லை. இந்த ஆய்வுக்கட்டுரையை வாசித்து இதில் இருக்கும் உண்மைத்தன்மையை ஈழத்தை இன்றுவரை ஆழமாக நேசிக்கும், ஈழமே மூச்சென சுவாசிக்கும் எமதருமை தமிழ் உணர்வாளர்கள் தெளிவுபட்டுக் கொள்வார்கள் என்றே நம்புகின்றோம்.
விடுதலை போராட்டம் அழிந்து போனதாக சிங்கள காடையரால் அறிவிக்கப்பட்ட அந்த நாளையே தமிழர்களாகிய நாம் இன்று முழுவதுமாக நம்பி நிற்கின்றோம். இதனை ”மூச்சுக்கு மூச்சு அண்ணா அண்ணா” என்று பேசும் எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது தமிழ்த்தேச பற்றாளர்களோ இன்றுவரை மறுக்கவில்லை என்பதும் நிதர்சனம். அப்படியாயின் விடுதலை போராட்டம் மௌனித்து போனது வைகாசி 18 இல்லையா? என்ற கேள்வி உங்கள் எல்லோரிடமும் இப்போது எழுந்து நிற்கின்றது. ஆம் எமது விடுதலை போராட்டம் இன்னும் மௌனிக்கவில்லை என்பதனையே இங்கே நாம் சுட்டிக்காட்டிட விரும்பிகின்றோம். ”தேசிய தலைவர்” என்ற ஆளுமையை மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் அனைவரின் மனதிலும் மறைமுகமாக நஞ்சை தூவிய சிங்கள ஏகாதிபத்தியம் விடுதலை போராட்டம் முடக்கப்பட்டு விட்டது. என்று ஒரு பாரிய பொய்யினை மீண்டும் மீண்டும் அவிழ்த்துவிட்டு அதனை நம்பவைக்க தமிழ் மக்களுக்கு உணரவைக்க மீண்டும் மீண்டும் போராடிக்கொண்டு இருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது.
மதிப்பிற்குரிய மேதகு தலைவர் ஈழதேசத்தில் இருந்து ஆற்றிய கடைசி உரையில் மிகவும் தெளிவாக கூறிய ஒரு விடயத்தை நாம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியினால் மறந்து போயிருக்கின்றோம். அதாவது ”எமது போராட்டம் மாற்றம் பெறுகின்றது என்றும் அந்த போராட்டம் புலம்பெயர் தமிழர் கையில் ஒப்படைக்கப்படுகின்றது” என்றும் பகிரங்கமாக எமது தலைவரால் அறிவிக்கப்பட்ட விடயம் சாதாரண தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதியப்படாமல் போனதற்கு சிங்கள ஏகாதிபத்தியத்தின் மிக துல்லியமான நகர்வுகளே காரணமாகியது. இப்போது எப்படியான நகர்வுகளை சிங்கள ஏகாதிபத்தியம் கட்டமைத்து விட்டது என்று எம் மக்கள் கேள்வி கேட்பது எமக்கு புரிகின்றது. அதாவது புலம்பெயர் அமைப்புகளில் விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் ”கருணா ”போன்று இருந்தோர்களை இனம் கண்டு அவர்களுடன் மறைமுக உடன்படிக்கைகளை கைச்சாத்திட தொடங்கியது.விடுதலை போராட்டம் உறுதியான கட்டமைப்பாக இருந்த காலப்பகுதியில் கருணாவின் துரோகம் இனம் காணப்பட்டு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது போல இப்போதும் விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்குள் உள்ள துரோகிகளை இனம்கண்டு மக்களுக்கு எடுத்து செல்ல 2009 ஈழதேசத்தில் தலைசாய கட்டமைப்பு இல்லாமல் போனதும் சிங்களத்துக்கு பெரிய கொண்டாடமாகப் போனது. இதனால் விடுதலைப்புலிகளால் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் இருந்த ”கருணா” போன்ற துரோகிகளை உள்வாங்கி விடுதலை புலிகள் உருவாக்கிய கட்டமைப்பை சிதைப்பதும் அதன் மீது நம்பிக்கையில்லா தன்மையை உருவாக்குவதும் இலகுவாகிப் போனது.
ஒரு கட்டமைப்பு மீது எப்போது நம்பிக்கை இல்லா தன்மை உருவாகின்றதோ அப்போதே அந்த கட்டமைப்பு உடைந்துவிடும் என்ற சிங்கள ஏகாதிபத்தியம் போட்ட கணக்கு சரியாக நகர ஆரம்பித்தாலும் விடுதலையை ஆழமாக நேசிக்கும் விலைபோகாத சில தலைவர்களின் கிடுக்குபிடியான நகர்வுகளால் முழுவதுமாக புலம்பெயர் கட்டமைப்பை உடைக்க முடியாமல் சிங்களம் திண்டாடி வருகின்றது என்றே தான் இங்கே சுட்டிக்காட்டிட வேண்டும்.
விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை சிதைப்பதால் விடுதலைப்புலிகள் உயிர்ப்புடன் இருந்தபோது பரிமாறப்பட்ட விலைமதிப்பில்லா ஆவணங்களையும் உண்மை சம்பவங்கள் நிகழ்வுகள் பாரிய எழுத்து முறையிலான கட்டுரைகள் நேரடி சாட்சியங்களை அழித்து விடுவதே சிங்கள ஏகாதிபத்தியத்தின் முன்னணி கொள்கைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
இதற்காக எவ்வாறான நகர்வுகள் சிங்கள ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டது என்ற தெளிவை மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும். விடுதலை புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் செயற்பட்ட நபர்களில் விலைபோகக்கூடிய சிலரை உள்வாங்கிய ஏகாதிபத்தியம் அவர்களை வைத்து புலம்பெயர் அமைப்புகளின் இலக்குகளை திசைதிருப்பியது.இப்போது நம்பிக்கையை முழுவதுமாக இழந்த அமைப்புகளை மீளவும் தேசியத்தை ஆழமாக நேசிக்கும் அந்த கட்டமைப்புக்குள் வாழ்ந்தவர்களின் கைகளில் ஒப்படைத்தது. ஏற்கனவே முழுவதுமான நம்பிக்கையை இழந்த கட்டமைப்பை கையில் வாங்கிய புதிய தலைவர்களின் நகர்வுகள் அனைத்துமே தேசியத்துக்கு எதிரான நகர்வுகள் போல தோற்றமளிக்க வைப்பது இலகுவான காரியமாகவே சிங்கள தலைமைக்கு விளங்கியது. இதனையே தான் நாம் இன்று கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
இதில் முக்கிய ஊடக தாக்குதலாக தமிழர் தேசிய தொலைக்காட்சியின் மீதான தாக்குதலை நாம் இங்கே சுட்டிக்காட்டிட விரும்புகின்றோம். விடுதலை புலிகள் கட்டமைப்பு உயிர்ப்புடன் இருந்த காலப்பகுதியில் புலம்பெயர் நாட்டில் தேசிய தொலைக்காட்சியில் பணிபுரிந்த பலரும் சிங்கள அரிச்சுவடி ஊடகங்களுக்கு விலைபோனதுடன் அவர்கள் தேசிய தொலைக்காட்சிக்கு எதிரான கருத்துக்களையும் இப்போது பரப்பி வருகின்றார்கள். இதனை நம்பி அரசியல் ஆய்வுகளை எழுதாத தேசியத்தை நேசிக்கும் பலரும் தேசியத்துக்கு எதிரான பதிவுகளை இடுவது வேதனை அளிக்கின்றது.
ஊரக பேரொளி என்பது ஒரு களியாட்ட நிகழ்வோ அல்லது வைகாசி மாதத்தில் நடத்தப்பட கூடாது என்று அறிக்கைவிடுவதற்கான எந்த முகாந்திரம் இருக்கின்றது என்று இன்றுவரை புரியவில்லை. எழுச்சி உணர்வுகள் எழுச்சிமிக்க நாட்களில் உருவாக்கப்பட வேண்டும். போராட்ட வடிவங்கள் மாற்றம்பெற்ற காலத்தில் ஊடக எழுச்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கின்றது. ஒரு ஊடகம் விடுதலை புலிகளால் அனுப்பப்பட்ட சகல ஆவணங்களுடனும் முடக்கப்பட்டு திசைதெரியாமல் பரிதவிக்கின்றது. இந்த ஊடகத்தை எழுச்சிமிக்க மாதத்தில் எழுச்சிபெற வைக்கவே ஊடக பேரொளி (ஊரக பேரொளியாக) நிகழ்த்தப்படுகின்றது. இதில் எதிர்ப்பவர்கள் நீங்கள் ஆழமாக ஒன்றை ஆழமாக ஜோசிக்க வேண்டும். ஐநா முன்றலில் ஐநா பேச்சுவார்த்தை நடக்கும்போது மட்டுமே ஆவணப்படங்களை கொண்டுபோய் வைத்து காண்பிக்க வேண்டும் என்பது எவ்வாறு எழுதாதே விதியோ, மாவீரர் மாதத்தில் மாவீரர் நாளில் மட்டுமே சில பாடல்கள் பாடப்படவேண்டும் என்பது எவ்வாறு எழுதாத விதியோ அதேபோல சிங்கள காடையனானால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வைகாசி 18 இன அழிப்பு நாளாக இருக்கின்றதே தவிர போராட்டம் அழிக்கப்பட்ட நாளாக இல்லை என்பதனை புரிந்து செயற்படுமாறு கேட்டு நிற்கின்றோம்.
வைகாசி மாதத்தில் எழுச்சிமிக்க பாடல்களும் எழுச்சிமிக்க கிராமிய விழிப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நித்தரை கொள்ளும் தமிழன்
விலைபோன துரோகிகளின் பாதத்தில் நிற்கும் தமிழன்
விழிப்படைய வேண்டும்.
ஆகவே மதிப்பிற்குரிய தமிழ் மக்களே எமது மூச்சென வாழும் ஈழத்தை நேசிக்கும் எமதருமை உறவுகளே
எம் போராட்டம் மாற்றம் பெற்று ஆயுத போராட்டம் மௌனித்து ஊடக போராட்டமாக ஆவண போராட்டமாக இன்றும் உயிப்புடன் இருக்கின்றது. ஆனால் எமது போராட்டத்தை துரோகிகள் தமது கையில் வைத்து குளிர்காய்கின்றார்கள். உணர்வுமிக்க விலைபோகாத சில தலைவர்கள் புலம்பெயர் அமைப்புகளுக்குள் இருந்துகொண்டு எமது கட்டமைப்புகளை மீள கட்டியெழுப்ப உணர்வுளுடன் போராடுகின்றார்கள் அதற்கான உங்கள் கரங்களை பற்றுவதற்காக காத்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களை நீங்கள் பலப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் எமது விலைமதிப்பில்லா ஆவணங்களை மீண்டும் எம் வசப்படுத்தி எமது வடுக்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வீர்கள் என்ற எமது நம்பிக்கையும் வீண்போகாது.
அது தவிர நிதர்சன பிரிவுகளால் எடுக்கப்பட்ட ஆவணங்கள் பலவும் போரின் இறுதிகாலங்களில் ”நம்பிக்கைக்குரியவர்கள்” என்று கொடுக்கப்பட அதற்கு தாமே உரிமையாளர்கள் என்று ஒரு தனி நபர் உரிமை கூறும் நிகழ்வுகளும் முடக்கப்பட வேண்டும். மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட போராட்ட அமைப்பை எவ்வாறு ஒரு தனி நபர் தனது என்று உரிமைகோர முடியாதோ அதேபோல ஒரு அமைப்பால் எடுக்கப்பட்ட எந்த ஒரு எந்த ஒரு ஆவணங்களுக்கும் ஒரு தனிநபர் உரிமைகூற முடியாது என்ற தெளிவை மக்களாகிய நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இறுதியாக எம் விடுதலை போராட்டம் உயிர்ப்புடன் இருந்தபோது உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டமைப்பும் சிதைந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டியது ஈழத்தை நேசிக்கும் நேசித்துக்கொண்டு இருக்கும் அனைவரதும் தேவையாகும்.
– இணையவிழி