சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை, வட மாகாண சபையினர் இன்று (07) நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று (06) நடைபெற்ற போ, அரசியல் கைதிகள் விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, நாளை வட மாகாண சபையினர் சிறைச்சாலைகளுக்கு செல்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தலைமையிலான குழுவினர், இன்று சிறைச்சாலைகளுக்குச் சென்று சிறைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், உடல்நிலையைக் கருத்திற்கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டுமென அரசியற் கைதிகளிடம் கோர உள்ளதாகவும் சபையினர் தெரிவித்துள்னர்.