படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் கியூடெக் பணிப்பாளர் படுகாயம் .
23-04-2009 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர்; நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 287 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கியூடெக்(HUDEC) கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை வசந்தசீலன் அடிகளார் உட்பட 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை செறிவான எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள்
இத்தாக்குதலில் காயமடைந்த கியூடெக் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்திரு வசந்தசீலன் அடிகளார் தனது கால் ஒன்றை இழந்தார் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 87 பேரின் உடலங்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்கள்.
-மீள் பதிவு