ஈரான் ராணுவத்தை தீவிரவாதப்படை என அறிவித்த அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை மீறிய வகையில் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் ஈரான் நாட்டு ராணுவத்தை தீவிரவாதிகள் என சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. மேலும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் ராணுவத்தை தீவிரவாதப்படை என அறிவித்த அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எங்கள் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டால் அமெரிக்காவின் ராணுவ முகாம்களை எங்களது ஏவுகணைகளின் இலக்கான 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து இடம் மாற்ற வேண்டியதாகி விடும். எங்கள் நாட்டு ராணுவத்தை தீவிரவாதிகள் என அமெரிக்கா கருதினால், எங்கள் படைகளும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையாக அமெரிக்க ராணுவத்தை கருத தொடங்கும் என அந்நாட்டின் ராணுவ தளபதி முஹம்மது அலில் ஜாப்ரி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.