முத்தையன்கட்டைச்சேர்ந்த பசுபதி இராதாகிருஷ்ணன் எனும் விவசாயி தனது விவசாய நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக கழிவுப்பொருட்களைக் கொண்டு பல இயந்திரங்களைத் தயாரித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த விவசாயியால் கச்சான் அறுவடையின் பின்னர் கச்சானைத் தனித்தனியாகப் பிரித்தெடுப்பதை இலகுபடுத்துவதற்காக ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மூலம் அறுவடை மேற்கொள்கின்றார்.
அடுத்து வயலுக்கு வரம்பு வெட்டுவதற்காக, நிலத்தை பண்படுத்துவதற்காக என பல இயந்திரங்களை தனது முயற்சியால் உருவாக்கியுள்ளார்.