2017-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் எச் தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டால்க்ஹோமொல் இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் எச் தாலர் இந்த ஆண்டுக்கான் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாதார துறைக்கு சிறந்த பங்களிப்பை அளித்த காரணத்திற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பரிசுக் கமிட்டியின் தலைவர் கோரன் ஹான்சன் கூறினார்.
பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும், பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வுகளையும் ரிச்சர்ட் ஹெச்.தாலர் சிறப்பாக செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.