24-04-2009 அன்று வெள்ளி சிறிலங்கா படையினர் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 197 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு எடுத்து வரமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது
வலைஞர்மடத்தில் தங்கியிருக்கும் மக்கள் வாழ்விடங்கள் மீது அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அகோர எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.
அதிகளவில் கொத்துக்குண்டுகள் மக்கள் மத்தியில் வீழ்ந்து வெடித்தன. வலைஞர்மடம் மாதா கோவில் பகுதிகளிலேயே எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 228 பேரை மாத்திரமே வலைஞர்மடத்தில் இருந்து உடனடியாக முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
சிறிலங்கா படையினரின் அகோரமான தாக்குதல்களைத் தொடர்ந்து உண்ண உணவின்றி, குடிக்க குடிநீர் இன்றி, உரிய ஆடைகள் இன்றி, அவதிப்படும் மக்கள் கடும் வெயிலுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளை நோக்கி வலைஞர்மடம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள்.
இதேவேளையில் சிறிலங்கா கடற்படையினர் அன்று கடலில் இருந்து கரையை நோக்கி பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலை 6:00 மணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்தினார்கள். இத்தாக்குதல்களில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அன்று காலை 9:10 மணிக்கும் பின்னர் 10:20 மணிக்கும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வட்டுவாகல் பகுதியில் மக்கள் வாழ்விடம் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின இதில் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்கள்.
-மீள் பதிவு