யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் வீடு புகுந்து இழுத்துவந்து அவரது பெற்றோர்முன்னிலையில் கடுமையாகத் தாக்கியுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை மானிப்பாய் லோட்டன் வீதியில் உள்ள வீடொன்றுக்கு வாகனத்தில் சென்ற காவல்துறையினர் வீடு புகுந்து இளைஞர் ஒருவரை இழுத்து பெற்றோர் முன்னிலையில் தாக்கினர். இதனைத் தடுக்கச் சென்ற இளைஞனின் தாயாரை இன்னொரு காவல்துறையினர் தாக்க முற்பட்ட சமயம் அங்கிருந்த குறித்த காவல்துறையினர் கண்காணிப்புக் கமராவைக் கண்டதும் தாயைத் தாக்குவதைக் வைவிட்டனர்.
ஆஸ்த்துமா நோயாளியான குறித்த இளைஞன் தற்போது மானிப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் இச்செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.