அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் அரசியல் கைதிகள் உள்ளதாகவும், இன்னொரு பகுதியினர் அரசியல் கைதிகள் எவருமேயில்லையெனவும், அவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எனவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பதாக ஐநாவின் சிறப்புஅறிக்கையாளர் பப்லோ டி கிறீப் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்துரையாடல் செயலணி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைமாறுகால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிலைமாறுகால நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம் என வலியுறுத்திய அவர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதன்மூலமே நம்பகத் தன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் அரசாங்கத் எவற்றினையும் நிர்ப்பந்திக்க முடியாது எனத் தெரிவித்த அவர் பரிந்துரைகளை மாத்திரமே செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் அரசியல் கைதிகள் உள்ளதாகவும், இன்னொரு தரப்பினர் அரசியல் கைதிகள் என எவருமே இல்லையெனவும் அவர்கள் அனைவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.