வடமாகாணத்தில் எப்படி போராட்டம் நடத்தினாலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என சிறிலங்காஅரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று வடமாகாணம் தழுவிய பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டதுடன் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
பியகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் இந்த நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசியல் கைதிகள் என்று அழைக்கமுடியாது.
குறித்த கைதிகள் போர்க் காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே அவர்களுக்கு விடுதலை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.