தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேகப்படுத்துவதற்கே அவர்களதுவழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றியதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு 108பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 40பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 78பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 68பேர் தமிழர்கள். மிகுதி 10பேர் சிங்களம் மற்றும் முஸ்லிம்கள். விடுதலை செய்யப்படாதவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு படுத்துவதற்காகவே அவர்களுக்கெதிரான வழக்குகள் அனைத்தையும் அனுராதபுரத்துக்கு மாற்றினோம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லையெனத் தெரிவித்தார்.