ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலசிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மைத்திரிபாலசிறிசேனவுக்கு தார்மீகப் பொறுப்புக் கிடையாது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரானால் மகிந்த ராஜபக்ஷவைப்போல் மக்கள் மீண்டும் அவரைத் தோற்கடிப்பார்கள்.
நிறைவேற்று அதிகாரமுறைமை தொடர்பாக அவர் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தார்மீகப் பொறுப்பு அவருக்குக் கிடையாது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவேண்டுமெனவும் தெரிவித்தார்