மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கான பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்திருந்தார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள மன்னார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள், தற்காலிகமாக, சுங்கத் திணைக்கள அறை ஒன்றிலேயே தற்போது தடுத்து வைக்கப்படுகின்றனர். அதில் போதிய வசதிகள் கிடையாது.
இதனைக் கருத்தில் கொண்டு, உப்புக்குளம் தெற்கு கிராம அதிகாரி பிரிவில், புதிய சிறைக்கூடம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாக இந்த சிறைக்கூடம் அமைக்கப்படவுள்ளது.