ஈழம் சார்ந்த கவிதைகளை உயிர்ப்புடன் படைக்கும் எழுத்தாளர்களையும்கலைஞர்களையும் தேடிய எமது பயணத்தில் எம் கண்ணுக்கு முதலில் தெரிந்த கலாநிதி தமிழ் மேதை அண்ணா கவிஞர் தம்பியின் தம்பியுடன் எமது நேர்காணல்
நிலவன்– வணக்கம்அண்ணா….
தம்பியின் தம்பி-வணக்கம்………
நிலவன் – முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் சொல்ல முடியுமா?
தம்பியின் தம்பி – என் அம்மா தமிழீழம், யாழ்-நவாலி
என் அப்பா தமிழகம் – ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்
நிலவன் – உங்களின் பற்றி கூறுவீர்களா?
தம்பியின் தம்பி – என் பெயர் மகிழன் என்கிற இரமேசு அமல்ராசு
புனைப்பெயர்கள் : கவிஞர் தம்பியின் தம்பி, என் தூவலே எனது துவக்கு
தமிழ்பித்தன், அப்துல்லா, மகிழன், தமிழ் அன்பன்
பிறந்தது – தமிழீழம்
வளர்ந்தது – தமிழகம்-தமிழீழம்-தமிழகம்
படிப்பு – முனைவர் (கலாநிதி)
நிலவன் – உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
தம்பியின் தம்பி – பயிற்சிப் பட்டறை : கம்பன் கழகம், கவியரசு இலக்கிய மன்றம், சிறு வயது முதற்கொண்டே கையெழுத்துப் பிரதிகள், கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சார்ந்த பல போட்டிகள்
ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா? அல்லது உருவாக்கபடுகின்றானா?
தம்பியின் தம்பி – வாழ்வியல் சூழலால், அவரவர் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புகளால், வேற்றின ஆதிக்கத்தால் படைப்பாளியும், போராளியும் உருவாக்கப்படுகிறான்,
நிலவன் – எழுத்துத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?
தம்பியின் தம்பி – தமிழ் மொழிப்பற்று – தமிழ் இனவெறி
உள்ளக்கிடக்கை – உரிமைக் குரல்
நிலவன் – உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது பற்றி….
என் அம்மா மற்றும் என் பள்ளிப்பருவத்தில் எனக்கு ஆசிரியராய் அமைந்த தமிழ் ஐயா
நிலவன் – உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்
தம்பியின் தம்பி – பள்ளி ஆண்டு விழா, பள்ளி இலக்கிய மன்றக்கூட்டங்கள், கல்லூரி கலைவிழா, பல்கலைக் கழகங்களுக்கிடையில் ஆன கலை இலக்கியப் பெருவிழா, ஆண்டு விழா, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, கவியரங்கம், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், நடுவர் என தொடர்கிறது.
நிலவன் ————(உங்கள் நூலின் பெயர்)நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?
தம்பியின் தம்பி – படைப்பு – கவிதை நூல் பல, ஆய்வுக்கட்டுரைகள், நாடகங்கள், கையெழுத்துப் பிரதிகள் (*இன்றைய வாழ்வியல் சூழ்நிலை வெளியில் சொல்ல இயலவில்லை, மன்னிக்கவும்)
நிலவன்- நீங்கள் ஒரு புரட்சிக் கவிஞராக எம்மால் உற்றுநோக்கப்படுகின்றது. புரட்சிக் கவிதைகள அதிகம் எழுத தூண்டியவை பற்றி ?
தம்பியின் தம்பி – ஈகியர் – ஈழம்
பேரினவாதக் கொடுமை, கொடூரம், அடக்குமுறை, அத்துமீறல்
என் தாயகச்சூழல் எம் உறவுகள் சிந்திய கண்ணீர்-செந்நீர்,
உலகம் முழுமை தமிழருக்கு எதிரான நடவடிக்கை
நிலவன் – நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது?
தம்பியின் தம்பி – ஆயிரம் கவிதைகள் படைத்தேன்
ஆயிரமாயிரமாய் கவிதைகள் படித்தேன்
ஆனாலும் நான் விரும்பும்
ஆகச்சிறந்த ஒற்றைக் கவிதை மேதகு வே.பிரபாகரன்
மற்றும்
வீரம் விளைந்த மண்ணடா
வேங்கை பாய்ந்த மண்ணடா
வெற்றி பெற்ற மண்ணடா
விடியல் கண்ட மண்ணடா
சிங்கம் பிளந்த மண்ணடா
சீராய்ந்தோர் மண்ணடா
சிங்கள ரழித்த மண்ணடா
செழு மறவர் மண்ணடா
தமிழ் ஈழ மண்ணடா
தமிழ்த் தலைவன் மண்ணடா
தேடற் கரிய மண்ணடா
தேற்றி வைத்தோன் மண்ணடா
போர் மறவர் மண்ணடா
பொங்கு தமிழ் மண்ணடா
புலிக் கொடியோர் மண்ணடா
புரட்சி பொங்கும் மண்ணடா
நெஞ் சுரத்தார் மண்ணடா
நெட் டுருகும் மண்ணடா
நன் னெறியோர் மண்ணடா
நற் றமிழோர் மண்ணடா
பெண் படையோர் மண்ணடா
பாய்ந் தழித்தோர் மண்ணடா
புதுமைப் பெண்டிர் மண்ணடா
பே ராற்றல்மிகு மண்ணடா
வித்துடல் விதை மண்ணடா
விருட்சம் எழும் மண்ணடா
துயிலு மில்ல மண்ணடா
துணை நின்றோர் மண்ணடா
நிலவன் –உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?
தம்பியின் தம்பி – பல நேரங்கள்…. காரணம் என் பெற்றோர் வசிப்பிடச்சூழல்
நிலவன் – ஒரு எழுத்தாளன் அறிஞராகவும் அல்லது கல்வியாளரக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா ?
தம்பியின் தம்பி – தேவை இல்லை, எப்பொழுதும் கற்றுக் கொண்டிருப்பவனாய் இருத்தல் நலம்
நிலவன் – ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கின்றீர்கள்?
ஆளுமை
நிலவன் – உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?
தம்பியின் தம்பி – எழுத்தாளர்கள் பலர் உண்டு, ஆனால் சில கவிஞர்களை மட்டும் குறிப்பிட விருப்பம், தாயகத்தில் புதுவை இரத்தினத்துரை, காசி அண்ணா, தமிழகத்தில் பாவலரேறு, பாவேந்தர், தேவநேயர்
நிலவன் –யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்…?
தம்பியின் தம்பி – கிடைக்கும் நூல்கள் அனைத்தையும் படிக்கும் வழமை உண்டு.
நிலவன் – தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில்,இன்றைய நவீன, நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்?
தம்பியின் தம்பி – மீச்சிறப்பு
நிலவன் – நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?
தம்பியின் தம்பி – அச்சம் இல்லை – அவசியம் – காரணம் அறியச்செய்தல்
நிலவன் – தற்காலத்தில் படைப்பாளிகளின் உளவியல் நிலை பற்றி?
தம்பியின் தம்பி – சற்று குறைவே. உணர்தலும், உரைத்தலும் அழகு
நிலவன் – ஈழ போர் கால வரலாறுகளை பதிவிடுவது பற்றி உங்கள் கருத்து ?
தம்பியின் தம்பி – உயிர்நாள்வரை ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டிய வரலாற்றுக்கடமை
நிலவன் – விமர்சனங்கள்அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
தம்பியின் தம்பி – தேவையான விடயம் – நம்மை மெருகு கூட்ட
நிலவன் – உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?
தம்பியின் தம்பி – ஈழம் சார்ந்த எனது ஒவ்வொரு எழுத்தும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் காலம் கடந்தும் பயணிக்கும் என நம்புகிறேன்
நிலவன் – இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தம்பியின் தம்பி – நிறைய எழுதுங்கள், நினைத்ததை எழுதுங்கள், நிலைத்திருக்க எழுதுங்கள்.
புரட்சி படை – புத்துலகு செய் – புவிவாழ் தமிழருக்காய்
நிலவன் – முகநூல் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள் ?
தம்பியின் தம்பி – காலம் தமிழர் நம் அனைவருக்கும் கொடுத்த அரியப்பெருங்கொடை
முகநூலும் – முகநூல் நண்பர்களும்
நிலவன் – அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
தம்பியின் தம்பி – தற்சமயம் ஒன்றும் இல்லை
நிலவன் – நிறைவாக என்ன சொல்லிட விரும்புகின்றீர்கள்?
தம்பியின் தம்பி – தமிழனாய் இரு
தமிழனாய் இற
தமிழனாய் பிற
நிலவன் – நன்றி …அண்ணா வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மாவீரர்கள் என்றும் துணையிருப்பார்கள்.
தம்பியின் தம்பி –நன்றி …