யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளரான நிமலராஜனின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, யாழ். ஊடக அமையம் ஆகியவற்றினால் நினைவுகூரப்பட்டது.
இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டுகாணாமல்போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் பேணப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவமானது நடைபெற்று 17 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இதுவரை எந்தவொரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படாது இழுத்தடிப்புச்செய்யப்பட்டு வருகின்றது.