முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது 26-03-2009 அன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை அன்று வியாழக்கிழமை அதிகாலை 4:15 நிமிடத்துக்கு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேரடியாக நடத்தினர். இத்தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர். அத்துடன் 4 நோயாளர்களும் நோயாளர்களின் உதவியாளர்கள் 4 பேரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களுக்கு இருக்கும் ஒரேயொரு மருத்துவமனையான மாத்தளன் மருத்துவமனை மீதே அன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் அன்று படையினர் எறிகணை, ஆர்பிஜி தாக்குதல்: கிராம அலுவலர் உட்பட 46 பொதுமக்கள் கொலை; 96 பேர் காயமடைந்தார்கள் அன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்தார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் அன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தினார்கள்.
அன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினரகள்;. இத்தாக்குதலில் மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் சேதமடைந்ததுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தார்கள்.
இத்தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03.09) அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மருந்துப் பொருட்களும் அழிந்து நாசமாகியுள்ளன.
மாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்
கனகசபை கலையழகன் (வயது 30)
ஜெயக்குமார் துளசிகன் (வயது 09)
ஜெயக்குமார் தனுசிகா (வயது 05)
ஜெயக்குமார் கருணைக்கனி (வயது 25)
மதனவசீகரன் பிரதீபா (வயது 02)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 32 வயதுடைய அஜந்தா அபராஜிதன் என்ற பெண் கிராமசேவையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிற பகுதிகளில் கொல்லப்பட்டவர்களின் விபரம் வருமாறு:
ஒரே குடும்பத்தவர்கள்
சந்திரகுமார் ஜினுஜா (வயது 06)
சந்திரகுமார் துசாந்தன் (வயது 10)
சந்திரகுமார் டிலானி (வயது 05)
சந்திரகுமார் மகிழ்நன் (வயது 02)
இவர்களின் தாயாரான சந்திரகுமார் ஜானகி (வயது 39)
தர்மராஜ் (வயது 25)
கணேசன் கஜேந்தினி (வயது 10)
உடன்பிறப்புக்கள்
புஸ்பகரன் செல்வன் (வயது 02)
புஸ்பகரன் தங்கா (வயது 04)
புஸ்பகரன் சின்னத்தம்பி (வயது 06)
புஸ்பகரன் பெரியதம்பி (வயது 09)
ஒரே குடும்பத்தவர்கள்
கணேசராஜா மதுசா (வயது 02)
கணேசராஜா வெள்ளை (வயது 05)
கணேசராஜா கஜந்தன் (வயது 07)
இவர்களின் தாயாரான கணேசராஜா யோகமணி (வயது 36)
கமலேந்தினி (வயது 28)
இந்திரராஜா புஸ்பலதா (வயது 22)
மரியாம்பிள்ளை காந்தரூபன் (வயது 12)
முருகையா ஆனந்தகுமாரி (வயது 04)
சந்தனம் தருமராசா (வயது 29)
இராமச்சந்திரன் கௌசல்யா (வயது 28)
தருமராஜா திவாகரன் (வயது 22)
செல்வரத்தினம் சியானி (வயது 08)
சந்திரகுமார் யெனுஜா (வயது 06)
வசந்தகுமார் சஜீபன் (வயது 13)
கனகசபை கலையழகன் (வயது 30)
திருநாவுக்கரசு சாமினி (வயது 12)
பாலச்சந்திரன் நிராஜ்(வயது 26)
இராசேந்திரம் ராமதாஸ் (வயது 25)
ரஞ்சன் அனுசியா (வயது 23)
அ.சகுந்தலா (வயது 49)
இ.கௌசல்யா (வயது 28)
பொன்னுத்துரை சுமங்கலி (வயது 23)
சுந்தரம் சிற்றம்பலம் (வயது 65)
சிற்றம்பலம் தர்மசேனன் (வயது 31)
யேசுதாசன் காயத்திரி (வயது 22)
பொன்னம்பலம் நடேசபிள்ளை (வயது 75)
செல்லத்துரை அன்னலட்சுமி (வயது 65)
விஜயகுமார் இமெல்டா (வயது 13)
சுப்பிரமணியம் சுஜிபா (வயது 13)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்கள்.
-மீள் பதிவு