யாழ் மாவட்டத்தில் 25, 648 இளையோர்கள் வேலை வாய்ப்புக் கோரி மாவட்டச் செயலகத்தில் விணப்பப்படிவங்களைப் பூர்த்திசெய்து கையளித்தள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வேலைக்காக பெரியதொகையில் மனித வளம் காத்திருக்க, ஒருபுறம் வேலை தொழில் தேடுபவர்கள், மறுபுறம் தொழில் வழங்குபவர்கள், இந்நிலையில், 44 துறைசார் நிபுணர்கள் பணியாளர்களைக் கோரி நிற்கின்றனர்.
இந்தத் தொழிற்சந்தை நான்கு வகையானவர்களுக்கு பயன்படுகின்றது. தொழில் தேடுநர், தொழிலாளர்களைத் தேடுபவர்கள், தொழிற்பயிற்சியை வழங்குனர் மட்டுமன்றி தொண்டராகப் பணியாற்றுபவர்களே.
எனவே யாழ். குடாநாட்டில் வேலையற்ற இளைஞர்கள் எந்தத் துறையில் அதிக வேலைவாய்ப்புள்ளதோ, அத்துறை சம்பந்தமாக பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் முன்வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.