இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டினார்.
நேற்றுக் காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த ஐரோப்பிய பாராளுமன்ற குழுவினர் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை யாழிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.. இதன்போதே ஆளுநர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் எவ்வாறான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.
அதுமட்டுமின்றி தமிழ் – சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி ஆளுநரிடம் இதன்போது ஆளுநர் , அவ்வாறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
குறிப்பாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதுடன் இளைஞர்கள் பலர் பட்டதாரிகளாக உள்ள போதும் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையே உரையாடிக்கொள்வதற்கு மொழி என்பது பிரச்சினையாக உள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிள்ளைகள் ஒன்றாக கற்றகூடிய பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டு அங்கே ஆங்கில மொழி கற்றிபிக்கப்பட வேண்டும். இத்தைகய சில விடயங்களை அடிப்படைகளில் மேற்கொள்வதன் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.