அநுராதபுரம் சிறையில் கடந்த 40 நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொ ண்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமொழியை ஏற்று தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். அத்துடன் தமக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், மாணவர்களின் முயற்சியில் நம்பிக்கை கொள்வதுடன், தமக்கான நீதி கிடைக்கும் வரை அனைவரும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 3 தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை தமிழ் நீதிமன் றங்களுக்கு மாற்றுமாறு கோரி, கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதியில் இருந்து, 40 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்ட த்தை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு போரா ட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் எந்தவிதமான ஆக்கபூர்வ மான நடவடிக்கைகளும் இது தொடர்பில் எடுக்கப்படாத காரணமாக கைதிகள் தொடர்ச் சியாக தமது போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, பல்கலை மாணவர்கள் மற்றும் உறவுகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதியும் தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக பல்கலை மாணவர்கள் நிர்வாக முடக்க போராட்டத்தை மேற்கொண்டு, அதில் ஒரு கட்டமாக வட கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கைதி கள் விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பத ற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தினார்கள்.
அக்கலந்துரையாடலில் 5 மக்கள் பிரதி நிதிகளே கலந்து கொண்டனர். இருப்பினும் கைதிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும் மாணவர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்றும், அத ற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள் வதாக தெரிவித்து அவர்களின் போராட்ட த்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் முடிவெடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் நேற்று யாழ்.பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவா ஜிலிங்கம், கைதிகளின் உறவுகள் உட்பட பலர் சென்று போராட்டத்தை மேற்கொண்ட கைதிகளுக்கு உணவு கொடுத்து அவர்க ளின் போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்தனர்.
மாணவர்களையும் தமக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் தொடர்ந்து அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தாம் முழுதாக மக்களையும் மாணவர்களையும் நம்பியிருப்பதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.