மாவீரர்களே!
உடைந்துபோய்க் கிடக்கும்
கல்லறைகளினூடே
எங்களை அப்படிப் பார்க்காதீர்கள்
நாங்கள் ஆண்ரோயிட் போனோடு
அவசரமாய் தயாராகின்றோம்
‘ஆளப்போறான் தமிழன்..’ பாடல் வந்த
படம் பார்க்க
நீங்கள் வாழத் தெரியாதவர்கள்
எங்களை வழி மறிக்காதீர்கள்!!
என்கிறார்கள் சில
ஈனப் பிள்ளைகள்
அட த்தூ..!!
இருப்பவனை வாழவிடு என
இறந்தவரை இகழ்ந்துமிழும்
உங்களை மனிதச் சந்தையில்
சரிவர அமரவைத்த
ஜனநாயகத்தின் மீது எனக்குச்
சரியான கோவம்
மாற்று இயக்கங்கள் எனினும்
நாங்கள் போற்றும் இயக்கம் எனினும்
எம் மறத்தமிழன் துயர்துடைக்கத்தான்
தோன்றின இருந்தும்
மதி கெட்டோர் மிதிபட்டும் – நேர்
வழி பட்டோர் துதிபட்டும்
வாழ்வதுதான் நிகழ்கால நியதி
கந்தக வேட்கை காய்ந்த
தேசத்தில் சுந்தரி லோலர்கள்
சுகமாய் வாழ்வது
சுபீட்சமாய்த் தெரிந்தாலும்
எம் சந்தனப் பேளைகள்
மேலேறி வருகையில்
வெந்தணல் உண்ட
வெள்ளாடுபோல
தலை தொங்கிக்கிடப்பீர்
இது விதி
– அனாதியன் –