உண்ண, உடுத்த, உறங்க மறவா
உலகத் தமிழினமே…….
உணர்வை மறந்தீரோ….
உம் உறவே யாம் என்பதும் மறந்தீரோ…
உரிமை மீட்டெடுக்க
உயிரது ஈந்த எமை
உளமது நிலை நிறுத்தி
உய்யும் வழி கேட்டு
உம்மால் இயன்றவரை
உதவிடல் ஆகாதா…….
உண்மைத் தமிழரெனில்
உடனடி தீர்வு வேண்டி
உலகப் பெருமாந்தர்
உணர்ந்திட வகைசெய்து
உம்மில் எம்மை நினைந்து
உதவிடல் ஆகாதா…….
உருமாறும் பச்சோந்தி
உய்ந்தகுடி சிங்களரை
உருகுலைக்க நாள்தேடி
உறவாம் எம்மைப்போற்றி
உரக்க குரல் கொடுத்து
உதவிடல் ஆகாதா…….
உந்தன் நல்லாதரவே
உரிய தமிழீழம் பெற
உற்ற மரபுவழி
உயரிய வேங்கையென
உயிரீந்து களமாடி
உதவிடல் ஆகாதா…….
உண்ண, உடுத்த, உறங்க மறவா
உலகத் தமிழினமே…….
உணர்வை மறந்தீரோ….
உம் உறவே யாம் என்பதும் மறந்தீரோ..
– தம்பியின் தம்பி