கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில்அன்று 27.04.2009 திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் 28-04-2009 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600மேல் எறிகணைகள் ஏவப்பட்டது இந்தக 17 மணிநேர காலப்பகுதியில் சிறிலங்கா படையினரால் 2600மேல் பல்குழல் பீரங்கி குண்டுகள், 1000மேல் ஆட்லறி எறிகணைகள், மற்றும் 2000மேல் மோட்டார் குண்டுகள் என்பன பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலய வாழ்விடங்களை நோக்கி ஏவப்பட்டது
முள்ளிவாய்க்கால், தாழம்பன்,ஓட்டைப்பானையடி மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது சுமார் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள் காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றார்கள்.
அத்துடன் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்களும் இரட்டை வாய்க்கால், ஓட்டைப்பானையடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிசப்பட்டது.
இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு திலீபன் மருத்துவ மையங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலையங்கள், முதலுதவி நிலையங்கள், முள்ளிவாய்க்கால் மருத்துவமனை, முல்லை, கிளி. மாவட்ட சுகாதார பிராந்திய சேவை நிலையங்கள் போன்றவற்றில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்படட்டது. எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் உயிர்சேதங்கள் தொடர்பான உண்மை தகவல்களை பெறமுடியதாநிலை ஏற்பட்டது இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்கள்.
-மீள் பதிவு.