நிரந்தர வேலைக்கு
வீதியில் இன்று நீ
நீதியைக் கொன்ற
கயவனிடம்
நிபந்தனை பலகையுடன்
நியாயம் கேட்டு கத்தி
கூச்சலிட குப்பத்து நாயா நீ?
மானம் உள்ள தமிழன் நீ
உண்டி சுருங்க
உறங்க இடமின்றி
ஒருபிடிச் சோத்திற்காக
உயிர் போன நிலை கண்டும்
மண்டியிடாமல் வன்னி
மண்ணில் வாழ்ந்த வீரனடா நீ.
”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” கூறி
வேங்கையாய் பாய்ந்த
உன் மேன்மை கண்டு
உலகமே வியக்க
அன்று உச்சரித்த உன் வாயால்
இரக்கம் அற்ற மனிதரிடம்
பிச்சை கேட்டு செல்கிறாயே?
.
பச்சைத் தமிழா
மிச்சம் உள்ள எம்மினத்தை
பாசம் இன்றி கொல்லும்
பகைவனுடன் சேர்ந்து
வேசம் போடும் வெள்ளை வேட்டிபோல்
மானம் இழந்து மாற்றான்
காலைப் பிடித்து
கூனி நடக்க
கூச்சம் வரவில்லையா?
உன் மனதில்.
பார்ப்போர் போற்ற
பகைவன் நடுங்க
பச்சை வரியுடுத்தி
பகைவன் சேனை புகுந்த
வீரம் செறிந்த இரண்டு
கால் புலியடா நீ
மண்டியிடாத வரிப்புலி
அணியில் வளர்ந்த வீரனடா நீ
அரசியல் கூற்றுக்கும்
அடுத்தவன் பேச்சுக்கும்
மிச்சம் உள்ள உன் மானத்தை
அடகு வைத்து பிச்சையிடாதே
”வரிப்புலி மாமா வருகிறார்” என்று
வாய் விட்டு சிரித்த மழலையும்
உன்னிலை கண்டு
தலைவர் மாமா வழியில்
தலை நிமிர்ந்த புலிமாமா
கிளை இழந்து நிழல் இழந்த மரமானதேனோ
என்று நகைத்திட கூடும் கருத்தில்கொள்
”எதிரி, எதிரி” எம்மினத்தை
கொன்றவன் சிங்களவன்
என்று கனவிலும் கூட
களமாடிய உன் மனதில்
”நல்லவன் அவன் என்று”
மண்டியிட்டு நீ சொல்ல
”நல்லவர் நாம்மென்று
மார் தட்டுவார் சிங்களவர்”
புராணங்கள் ஓதுவார்
புரியாது வருங்கால சந்ததிக்கு
மானம் உள்ள எம் பெண்ணை
மான பங்கப்படுத்தியவன்
இரக்கம் இன்றி எம்மினத்தை
ஈழமண்ணில் கொன்றழித்தவன்
குறையின்றி வாழ்ந்த
குடிசைகள் மீது
கொத்துக் குன்றுகள் வீசி
கொன்றதும் அவனே
நீ சொல்லு நாசக்காரன்
அவனென்று
வீர உணர்வை நீ கொண்டிருந்தால்
உன் பிள்ளைக்குச் சொல்லு
இரக்கம் அற்ற ஈனப் பிறவிகள்
சிங்களவன்
கொலைக்களம் ஆடி
கொன்று குவித்தான் ஈழத்தில்
எம்மினத்தையென்று
இன்று வீதியில் நீ நின்று
நாளை
உன் பிள்ளையின்
விடிவிற்காய் போராடு.
உயிர்ப்பூடன்
தரணி