கார்த்திகை 27 ஈழத் தமிழர் வரலாற்றில் தண்ணீரில் மட்டுமல்ல கண்ணீரிலும் நிறைந்த நாள். ஈழ விடுதலை போராடத்தில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கொள்வதும் , அவர்களுக்கு அஞ்சலி செய்வதும் , மட்டுமன்றி தமிழ் மக்களின் தேசியக் கனவின் நாயகனாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமும் காலத்தால் அழிக்க முடியாத வரலாறு, .
அந்த வகையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஈழத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்களான வடக்கு கிழக்கில் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் கார்த்திகை மாதத்தில் மாவீரர் வாரத்துடன் மரம் நடுகை வாரமும் இயற்கையின் பால் கொண்ட அக்கறையுடன் வெய்யில் வெக்கை தனித்து குளிர் நிலையில் நாட்டப் படுதல் உயிர்களின் உயிர்ப்பின் உன்னதமாகக் கொள்ள முடியும் .
ஈழத்தில் 2009 தொடக்கம் கடந்த வ்ருடம் வரை மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் அதிகார வர்க்கங்களின் கண்களுக்கு தெரியாத வகையில் ஒழித்து ஒழித்து தங்கள் ஆத்ம விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் கொண்ட தமிழ் மக்கள் இவ்வருடம் தாயகம் எங்கும் மிக வெளிப்படையாக தமிழ்த் தேசிய உணர்வை வெளிக்காட்டியது மட்டுமன்றி தமது ஆத்மாவையும் ஆற்றுப் படுத்திக்க கொண்டனர்.
இராணுவத்தினால் அடையாளமின்றி அழிக்கப் பட் ட துயிலும் இல்லங்கள் ஒரு வார காலம் முன்பே துப்பரவுப் பணிகள் இடம்பெற்றதுடன் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப் பட்டு எழுச்சிப் படுத்தப் பட்டது புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர் , . கனகபுரம், வவுனியா குடியிருப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் , முழங்காவில், தீவகம் சாட்டி ,முள்ளி வாய்க்கால், தோராவில், வன்னி விளங்குளம், கனக புரம் வவுனியா வளாகம் , மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மட் டக்கள ப்பு அம்பாறை ஆகிய இடங்களிலும்மஞ்சள் சிவப்பு கொடிகளால் துயிலும் இல்லங்கள் அலங்கரிக்கப் பட்டு மாவீரர்களின் புகைப்படங்கள் அஞ்சலிக்கப் பட் டன.முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்பங்கள் நிகழ்வினை ஒழுங்கமைத்தனர், அரசியல் தலைமைகளையும் , அரசியல் வாதிகளையும் மக்கள் புறக்கணித்தனர் . தங்கள் பிள்ளைகள் எங்கு விதைக்கப் பட்டனரோ அங்கு சென்று அஞ்சலி செய்து ஆறுதல் கொண்டனர்.
அந்த வகையில் , தமிழர் தாயகத்தில் உணர்ச்சி பூர்வமாகவும். மாவீரர்களின் பெற்றோர்களால் பொதுச் சுடர் ஏற்றப் பட்டு , மலர்மாலைகள், மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டதுடன், ”தாயகப் பாடலும் இசைக்கப் பட்டது .சந்தன பேழைகளின் பாடல் வரிகள் மக்களை உணர்வெளிச்சிப் படுத்தியதுடன் அவர்களின் உள்ளக கிடைக்கைகளை வெளிப்படுத்தி கொட்டித் தீர்த்து மனஆறுதலைக் கொடுத்தது. ஈழ அரங்கில் சடங்கரங்கின் பணியை இத்தினம் உள்வாங்கிக் கொண்டுள்ளது.
மேலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் 2009 இந்த பின்னும் சர்வதேச நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர் , ஈழத்தில் உணர்ச்சி பூர்வமாகவும் எழுச்சி பூர்வமாகவும் அனுஷ்ட்டிக்கப் பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகள் ,புலம் பெயர் நாட்டில் கொண்டாட்ட நிகழ்வாக இடம் பெற்று வருகின்றது . அந்தவகையில் லண்டன், அவுஸ்திரேலியா , சுவிஸ் , ஸ்கொட்லந்து, பிரான்ஸ் , நோர்வே , இத்தாலி, ஜெர்மன், பின்லாந்து ஆகிய இடங்களிலும் இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, இராமநாத புரம் ஆகிய இடங்களிலும் எழுச்சி பூர்வமாக கொண்டாடப் பட்டதுடன் விளையாட்டுப் போட்டி, கலை,கலாசார நிகழ்வுகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும் . மிக பிரமாண்டமாக கொண்டாடப் பட் டன . தமிழ் மக்களின் வாழ்வில் மறக்கவும் மாற்றவும் முடியாத வரலாற்றின் வாழ்வியல் கார்த்திகை 27 .
லண்டனில் எக்ஸல் மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ தேசிய சின்னங்களை தாங்கிய தபாலத் தலை வெளியிடப்பட்டு உள்ளது. எமது தேசிய அடையாளங்களை தடை செய்து அவற்றை மக்கள் மனங்களில் இருந்து நீக்கும் இலங்கை அரசின் சதியை முறியடிக்கும் நோக்கில் இவ் தபால்த் தலை வெளியிடப் பட்டதாக லண்டன் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் கோல்டன் மண்டபத்தில் இடம்பெற்றநிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து கலை நிகழ்வுகளுடன் கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம் பெற்றன. ஸ்கொட்லந்தில் இடம் பெற்ற நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளுடன் , விசேட உரைகளும்
யேர்மனி டோன் மூன் நகரில் இடம் பெட்ரா நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளுடன் எழுச்சிப் பாடல்களும் நடனங்களும் , இடம் பெற்றதுடன் ஜெர்மனியர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள். நெதர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் தமிழமுதம் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள், நடனங்கள், கவிதைகள், மற்றும் சிறப்புரைகள் என்பனவும் இடம் பெற்றன,. அத்துடடன் தேசிய நாள் விளையாட்டும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்குதலும் இடம் பெற்றது.
சுவிஸ் இல் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள் , கவியரங்கம், காலை கலாசார நிகழ்வுகளுடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியின் விசேட உரையும் ,
பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் மண்டபம் நிறைந்த மக்கள் எழுச்சியுடன் , மாதிரிக் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. மண்டபம் நிறைய நடு கற்கள் வைக்கப் பட்டு சிவப்பு, மஞ்சள் அலங்காரங்களினால் எழுச்சி நிறைந்திருந்தது. மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப் பட்டதுடன் நடனம், நாடகம், எழுச்சிப் பாடல்கள், கவிதை,என்பனவும் கலைத் திறன் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப் பட்டன,..
நோர்வே ஒஸ்லோவில் இடம் பெற்ற நிகழ்வில் நாடகம் உட்பட எழுச்சிகரமான பல கலை நிகழ்வுகளும் நியூசிலாந்தில் மவுண்ட் ரொஸ்கில் போர் நினைவு மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் புலி கொடியும் அந்நாட்டுக்கு கொடியும் ஏற்றப் பட்டு பொதுச் சுடர் ஏற்றப் பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன. மேலும் பல்வேறு எழுச்சி நிகழ்வுகளுடன் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப் பட் டதுடன் மாவீரர்களின் போராட்ட வலிகள், , தியாகங்கள் குறித்து விசேட உரைகளும் , சிறப்புரைகளும் . இறுதியாக தமிழீழ எழுச்சிப் பாடல்களும் , ,கவிதை நிகழ்வுகளும் அவுஸ்திரேலியா சிட்னியில் நியூ வின்றன் மைதானத்தில் இடம் நிகழ்வில் 3 ஆயிரத்தகத்துக்கும் மேற்றப்படட மக்கள் பங்கு கொண்டனர் . சிவப்பு மஞ்சள் கொடி அலங்காரங்களுடன் இங்கும் மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப் பட்டு , அஞ்சலிகள், வணக்கப் பாடல், வணக்க நிகழ்வுகள், சிறப்புரை என்பனவும் இடம்பெற்றதுடன் உயிர்ப்பூ வெளியீட்டகத்தின் ” காந்தள் கரிகாலன் ” என்ற விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கய பதிவுகளைக் கொண்ட தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல், வெளியீடு செய்யப் பட்டது .
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கமைப்புடன் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கில் இடம் பெற்ற நிகழ்வில் மாவீரர் நாள் அறிக்கை ஒளிபரப்பப் பட்ட து. நோர்வே அன்னை பூபதிகலைக் கூட மாணவர்களின் பல்வேறு காலை நிகழ்வுகளும் டென்மார்க்கில் நடை பெற்ற எழுச்சி நிகழ்விலு ம் 2008 ஆம் ஆண்டு நடை பெற்ற மாவீரர் தின உரை வாசிக்கப் பட்டது மெல்போன் ஸ்பிரிங் வலே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலும் , பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்தியாவில் தமிழ் நாட்டிலும் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தேசியத் தலைவரின் பிறந்த தின நிகழ்வுகளும் தமிழ்த் தேசிய விரும்பிகளினால் குழுவாகவும் தனியாகவும் கொண்டாடப்பட்டது . சென்னை மெரினா கடற்கரையிலும் , புதுச் சேரி அரிய குப்பம் பகுதியில் கப்டன் மில்லர் அரங்கில் கொளத்தூர் மணி தலைமையில் மாவீரர்களின் புகைப் படங்களுக்கு சுடர் ஏற்றப் பட்டு மலர் அஞ்சலியும் விசேட உரை நிகழ்வும் தஞ்சாவூர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்ததமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகளுடன் , தவில் நாதஸ்வர இசைக்க கச்சேரியும் இடம் பெற்றதுடன் . ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டிலும், கிருஷ்ண கிரியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன .
நயினை யோகா . நந்தினி [ லண்டன் ]