மாவீரர் நடந்த மகத்தான மண்ணில்
எங்கள் வீரம் தெரியும்
விண் போற்றும் வீரியச் செல்வங்கள்
விழிமூடித் துயில்கொள்ளும்
கல்லறை வீடுகளில்
காவியம் ஓவியமாய் பிறக்கிறது
தேகம் எரிந்த வேளையிலும்
தேசியம் காத்திட்ட மாவீரம்
தென்றல் காற்றும்
வருடிச் செல்லும் தென்னை மரமும்
பேசிக் கொஞ்சும் எம் மாவீரர்
நினைவுகளை நீங்காமல்
ஊர் போற்றும் உலகறிய
மண்ணிலும் விண்ணிலும்
வீரியப் படையது வேகம் கொண்டது
மாவீரர் படையது பயமில்லா வென்றது
முன்னேறும் படையது மாவீரர் படை
மாறாத புகழாகி நின்றது
கல்லறை வீடுகளில்
காதலும் வாழ்கிறது
கண்முன் காலமும்
கடந்து செல்கிறது
நாயகர் வழியோ
மொழியாகி விடிகிறது
புலி வீரம் பதுங்கிடுதே
நரி கொஞ்சம் ஆடட்டும்
வலி எல்லாம் மறையட்டும்
புது வழியை பிடித்தபடி
மாவீரர் மொழியதை
முழங்கியே வெற்றி நடை
நடந்திடுவோம் கல்லறை
வீடுகளில் காதலும் வாழ்கிறது
– வன்னியூர் கிறுக்கன்