வையகத்தில் வாசகாக்கு வரமாகிய வடிதமிழ்த் தலைவர் அவர்கட்கும்
நைத்தியமாகக் காந்தள் கரிகாலனை நங்கூரமிட்ட தொகுப்பாளர் அவர்களிற்கும்
சையோகமாக இவ்வரங்கு ஏகியுள்ள சங்கைக்கு உரித்தான சபையோர்க்கும்
மையதனைத் துளியாய்த் தொட்டெழுத மனதினில் துளிர்த்த கவிமொட்டொடு
கைவளைகள் கவினொடு களித்தாடக் கார்த்திகைப்பூக் கரமிரண்டும் கூப்பியிங்கு
தையலிவள் தக்கனையாகத் தருகிறாள் தங்கத் தமிழினில் வணக்கம்!
தாயக விடியலிற்காய்த் தம்மைத் தாரையிட்ட தியாகத் தடங்களை
ஆயத்; தேடியெங்கும் துருவி ஆங்காங்கே உதிரியாக விட்டிடாது
ஓயவிடாப் பிடிப்பின் பயனாக ஒப்புரவாகத் துடிப்புடன் கோர்த்து
நேயமொடு வரலாற்றைச் சந்ததிக்கு நெக்குருக்கும் ஆவணத் தொகுப்பாக்கி
மாயக்கதை ஒன்றினை மறுபடியும் மற்றொரு தேரோ புனைந்திடினும்
சாயத்தகாச் சரித்திரம் ஆக்கிடும் சத்திய உயிர்ப்பூப் பொக்கிஷமிதே!
அகவணக்கத்தில் அடியிடட்தைத் தொடருது அடுத்துப் படத்தொடு உள்ளடக்கம்
இகத்தில் நினைவுத் தடங்கள் ஈழநிலத்தில் துயிலும் இடங்கள்
உகத்திடக் கொடிக்கொரு பாடல் உருக்கிட மாவீரர்கக்ரும் பாட்டு
பகத்துடை தினத்திற்காயக் கையேடு பயன்பாட்டுக் கோவை கொடியதற்கு
மகத்துவ மாவீரர் நாளுரைகள் மாபுகழாளர்ககு விசேஷமுடை நாட்கள்
புகடடும் சிந்தனைத் துளிகளுடன் புடமிட்டவையை இன்னும் சொல்லவா!
காரியக் கனலாய்க் கரும்புலி களத்திற்காயத் தளத்தில் தற்கொடைப்படை
வரீயமாய் விதையான மாவீரர் விகாகமான வங்கக்கடல் தீக்காவியம்
கோரியே ஒளிர்ந்த ஈகைச்சுடர் கொள்கையோடு மிளிர்ந்த தியாகதீபம்
போரியல் வாழ்வியல் வரலாற்றில் பொருண்மிய ஆதாரப் பொசுக்கலிலும்
தாரிகளைத் தடுக்கும் முடகக்லிலும் தமிழீழத் தேசியம் அவசியமென
சோரியாய்ப் பீறிட்ட சோகமெலாம் சோரலாமா காலத்தின் சுழற்சியிலே!
எழுத்தில் இம்மிதனும் பிசகலாம் எண்ணத்தில் அறவில்லை அப்பழுக்கு
உழுவைகள் நெஞ்சில் நெருப்பொடு உயிரென்பது தன்னாட்சி சுயநிர்ணயம்
பழுத்த அனுபவ முதிர்வொடு பத்திரமாய்ப் பாதுகாகக்ப் படைத்தவைகள்
முழுத்துச் சற்றும் அழியாதிட முனைப்போடு புலமிங்கு பெயர்ந்தோரே
இழுக்கு எற்றைக்கும் அணுகாதிட இற்றைக்கே பொறுப்பை ஏற்றவராய்
அழுத்தமாய் அகிலத்தில் பரப்பிடவே ஆவன செய்வதெம் கடனன்றோ!
காந்தள் கரிகாலன் உயிர்ப்பினைக் கார்த்திகை மாதத் தினமிதிலே
பாந்தமாய் வாங்கலொடு நின்றிடாது படித்துப பலருடன் பகிர்ந்திட்டு
ஏந்தியெம் இறையடி இறைஞ்சிடின் எண்ணற்ற நூல்கள் பெருக்கிடின்
நீந்திக் கடந்திடும் நெருப்பாற்றின் நிலவன் பதிப்புகளைப் பாராட்டி
போந்தை இலச்சினையை இலக்காக்கிப் பொற்புறு இலட்சியவாதி என
ஈந்திடும் பற்றைச் செண்டீதுடன் இதயம் நிறைந்திட வாழ்த்துகிறேன்!
– மனோ ஜெகேந்திரன்