என்னை நீ அன்பாக
அணைக்கும்போதும்
என் குறும்புகளை
ரசிக்கும் போதும்
நீ என் தாயாகின்றாய்
நான் செய்யும் தவறுகளை
நீ தட்டி கேட்கும்
நேரத்தில் நீ என்
தந்தையாகின்றாய்
நீ மழலைபோல
உன் துன்பங்களை
என்னுடன் கொட்டும்போது
நீ எனக்கு மகனாகின்றாய்
நீ உறங்காமல்
உன் கனவுகளை
விதைக்கும்போது
நீ என் கவிஞராகின்றாய்
என் மனதை நான்
இலகுவாக திறந்திட
நீ எனக்கு ஒரு வரமாகின்றாய்
அண்ணா
நீ இல்லாத அந்த வாழ்க்கைகள்
ஒளியில்லாத நிலாக்காலமாய்
நிம்மதியில்லாத ஆழக்கடலாய்
அச்சத்துடன் மட்டுமே நகரும்
என் அண்ணா
உன்னை நான்
சந்திக்கும் நிமிடங்களை
எண்ணிக்கொண்டே காத்திருக்கிறேன்
அதிகாலையில் அந்த நேரத்தில்
என்னை அணைத்து
உன் தாய்மையின்
அழகினை இந்த உலகத்திற்கு
உணர்த்திவிடு
– காவியா.