இந்த வருட முதல் அரையாண்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஆணையகத்தில் 4121 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் 8946 (2015) மற்றும் 9171(2016) முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் எந்த சமூகத்தவர்களால் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த விபரங்கள் தம்வசம் இல்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.