பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களை கேவலமாக விமர்சித்துவருகின்ற பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு கர்தினால் எடுத்த முயற்சிகளுக்கு ஞானசார தேரர் தனது ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்ததாக தெரியவருகிறது.
பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதி விசுவாசத்துக்கு உரியவராக கடந்தகாலங்களில் மதவாத, இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.