அன்னைத் தமிழீழம்
சிங்கள வெறி நாயின் பேயாட்டம்
சீர்கெட்ட மானுடத்தின் போராட்டம்
சிறுவர் சிறுமியரை சிதைத்தாங்கே
சினம் கொண்டு வல்லுறவு பருந்தானான்
கைகட்டி கண்முடி புறமுதுகில் சூடிட்டு
கன்னியரை கற்பழித்து மார்பறுத்தான்
காணொளி காட்சியது கண்ட பெருமகனார்
காட்டு வேங்கையதன் சீற்றமுடன்
அடிமை விலங்கொடிக்க என் அண்ணையவன்
ஆர்ப்பரித்து வந்திடுவான் வெகுவிரைவி்ல்
அன்றே நீயடைவாய் பெரும்பலனை – உன்
அன்னை உனக்கீந்த பால் யாவும்
கொப்பளிக்கும் வாயினூடே பெருங்
குருதி வழிந்தோட உன் சங்கறுப்பான்
மாற்றான் பெண்டிரையும் மதித்திட்ட
மறத்தலைவன் மாமேதை எம்தலைவன்
இனத்தை வேரறுத்த நின்தலையை
இரண்டாய் பிளந்திடுவான் இயல்புடனே
வெற்றி பலகண்ட தமிழ்சாதி எங்களுக்கு
வீரமும் விவேகமும் வாழ்வியல் முறையடா
அடங்கா திமிர்கொண்ட உன்னினத்தை
அடக்கி திமில் முறிப்பான் காளையுன்னை
கோணமலை எழிலூடே புலிபொறித்த எம்
கொற்றவனின் கொடிபறக்கும் நாள் வரும்
அன்னைத் தமிழீழம் அவனியில் மலர்ந்திடும்
ஆற்றல்நிறை தமிழ் மரபு உலகுணரும்
பிறந்த நாடொதுக்கி புலம்பெயர்ந்து
பூமியில் ஏதிலியாய் மனம் கொதிக்கும்
இனமக்கள் யாவருமே மனமொப்பி நாளை
இன்பமுடன் ஈழப்பெரு நாட்டில் வாழ்ந்திடுவர்
– கவிஞர் தம்பியின் தம்பி