ஒல்லாந்தர் எமது நாட்டை 1658 ஆம் ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை தமது
காலனியாக வைத்திருந்து ஆண்டது யாவருக்கும் தெரியும்.
அந்த நாடு இன்று நெதர்லாந்து Netherlands என அழைக்கப்படுகிறது.
அங்கு தமது நிலவளத்தை அதிகரிப்பதற்காக கடற்கரைகளை மண் இட்டு நிரவி கடலை
ஆழப்படுத்தி புதிய நிலங்களை உருவாக்குகின்றார்கள்.
எமது நாட்டிலும் அது போன்றதொரு தேவைப்பாடு எழுந்துள்ளது.
படத்தில் நீங்கள் காணும் இடம் கைதடி பனை அபிவிருத்திச் சபைக்கு முன்பாக
உள்ள பரவைக் கடலின் ஒரு பகுதியை மண் இட்டு நிரவி ஹோட்டல் ஒன்று
கட்டுவதைக் காணலாம்.
உரிய அனுமதிகள் பெறப்பட்டுத் தான் இக் கட்டிடம் கட்டப்படுமென நம்புகிறேன்.
சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் கடற்கரைகளை அண்டிய நில மீட்பு எமது
நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையானது.
குருநகர், பாசையூர்,கொழும்புத்துறை, நாவாந்துறை போன்ற பிரதேசங்களில் சன
அடர்த்தி அதிகமாக உள்ளது.
அங்கு மக்கள் குடியிருப்பு நிலத்திற்கு மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது குருநகரில், பாசையூரில் சில இடங்களில் நில மீட்பு செய்யப்பட்டு
வீடுகள் கட்டப்பட்டுள்ளதனைக் கண்டுள்ளேன்.
இந்த நிலைமை அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடலை ஆழப்படுத்தி
இயற்கையான கண்டல் தாவரங்களை அழிக்காமல் நிலங்கள் உருவாக்கப்படல்
வேண்டும்.
கொழும்பு காலிமுகத் திடலில் துறைமுக நகரத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
அதனை அடியொற்றி வடக்கிலும் சன நெருக்கடி மிக்க இடங்களில் கடற்கரைகளை
அண்டி புதிய நிலங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியிருப்புகள்,வணிகக்
கட்டிடத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஒல்லாந்தர் முழு உலகுக்கும் நல்ல உதாரணமாக உள்ளார்கள்.
நாமும் எமது நாட்டை முன்னேற்றுவோம்.
நண்பர்களே , எனது பதிவு தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் இருப்பின்
தாராளமாகப் பதிவிடலாம்.