அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பொது நிதியில் ஆம்ட்ராக் ரயில்வே நிறுவனம் இயங்கி வருகின்றது.
சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் பயணித்த ஆம்ட்ராக் ரயிலே விபத்திற்குள்ளாகியுள்ளது.
சியாட்டிலில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் ஆம்ட்ராக் ரயில் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடிரென தடம்புரண்டு வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரயிலின் 5 பெட்டிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வீழ்ந்தமையால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.