அண்மையில் சில நாட்களாக
உருவாகிய இஸ்லாம் எனப்படும்
சிலரின் தவறான செயல்களை
எதிர்த்தும் எம்மை நம்பி
உயர்ந்த அரசியல் வாதிகளின்
அறியாமை செயல்களை எதிர்த்தும்
ஒரு சிலர் அதைக் கண்டித்தும்
முகநூல் போராளிகள்
என்று சில சட்டங்களே அறியாத
பலர் புரியாத புதிரான உண்மைகளை
விரிவாகவும் தெளிவாகவும்
முகநூல் மூலம் சுட்டிக்காட்டினார்கள்.
இது பலரும் அறிந்த உண்மை.
சொந்தக் காணிகளை
சிலர் அத்துமீறி குடியேறிய போது
வடகிழக்கு பகுதிகளில்
இருந்த சிலர் ஆவேசமான
பதிவுகளும் சில உண்மைகளை
அப்பட்டமாகவும் எழுச்சி போராட்டங்களும்
என்று தங்களால் முடிந்ததை
செய்தார்கள் இதேவேளை
புலத்தில் இருந்த சிலர்
வானொலிக்கு விளம்பரமும்
காதல் காவியங்களும்
கிராமிய நடையில் கவிதை
என்ற பெயரில் கிலுகிலுப்பு
நிகழ்ச்சிகளும் காணொலியில்
வீராப்பு பேச்சும் என்று
இருந்தார்கள் இது அனைவரும்
அறிந்த தெரிந்த உண்மை
அரசியல் வாதிகளை எதிர்த்தார்கள்
ஏன் எதிர்த்தார்கள் தெரியுமா ?
சில முஸ்லிம்களை வெறுத்தார்கள்
அவைகள் ஏன் என்று தெரியுமா ?
சிலரை வன்மையாக கண்டித்தார்கள்
அதுதான் ஏன் என்று தெரியுமா ?
அரசியல் நேரத்தில் வாக்குரிமை
எமக்கு இருக்கிறது என்றால்
ஒழுங்கு இல்லை என்றால்
கேட்கும் உரிமையும் எமக்குண்டு.
இஸ்லாம் எனப்படும் சிலர்
அதன் போதனைகளே தெரியாமல்
செய்யும் தவறை சுட்டிக்காட்ட
வேண்டிய தருணம் அது
சிலர் அரசியல் சிலர் அரிசியில் என்று
உணவோடும் உரிமையோடும்
விளையாடினார்கள் அதைக்
கேட்டார்கள் நான் பலரின்
பதிவுகளை படித்திருக்கிறேன்
நீங்களும் தான் அறிவேன் நான்
முகநூல் போராளிகள் இன்று
அரசியலில் நுழைந்து இருக்கிறார்களாம்
இதில் எனக்கு உடன்பாடு இல்லை
அதன் நம்பிக்கை இழந்தவனில்
நானும் ஒருவன் !
ஆனாலும் அடக்குமுறைக்குள்
இருந்து துளிர் விடுகிறார்கள்
வெளிநாடுகளில் இருக்கும்
எம் சொந்தங்களில் பலர்
தமிழ் மொழியை வளர்க்கும்
விதத்தில் இருக்கிறார்கள் பெருமை
சிலர் காலம் கடந்ததை
இன்றும் உண்மையாய்க் கூறுகிறார்கள்
அது எங்களின் உரிமை
சிலர் ஏழைகளிற்கு அநாதை
பிள்ளைகளிற்கு உதவுகிறார்கள்
உணர்வுகளின் வெளிப்பாடு.
ஆனாலும் அதில் ஒரு சிலர்
ஒருவன் உயர்வதை வீழ்த்துவதற்கும்
கீழ்த்தரமான பிரச்சாரங்களை
தூண்டும் விதமாகவும் தமிழ்
சிங்கள முஸ்லிம்கள் ஒற்றுமையை
சிதைக்கும் விதமாகவும்
இவைகளை பயன்படுத்தி
தங்களை விளம்பரம் செய்கிறார்கள்.
ஒன்று மட்டும் ஈழத் தமிழனாய்
கூறுகிறேன் இங்கு எமக்கு
சுதந்திரமும் இல்லை நிம்மதியும் இல்லை
வீடும் இல்லை காணியும் இல்லை
உரிமையும் இல்லை உடமையும் இல்லை
இருப்பது உயிருள்ள யாக்கைகளாய்.
மீண்டும் போராட பலமில்லை
மீண்டும் போராட்டம் தேவையில்லை
ஈழம் வேண்டும் புனிதம் வேண்டும்
தீமைகள் வேண்டாம் நன்மை வேண்டும்
வேற்றுமை வேண்டாம்
ஒற்றுமையே வேண்டும்.
இவைகளைத்தான் நாங்கள்
விடியும் ஒவ்வொரு நாளும்
எதிர் பார்க்கிறோம் அறிவீர்கள்
உங்கள் விளம்பரத்திற்கு எங்களை
பயன்படுத்த வேண்டாம்
அக்கரைக்கு இக்கரை பச்சை
என்று நினைத்திட வேண்டாம்
இங்கு இன்னும் இரத்த வாடைதான்.
இவைகள் அனைத்தும்
என் தனிப்பட்ட கருத்துக்கள்
யார் மீதும் குற்றம்சாட்ட அல்ல
நான் அறிந்ததை பகிர்ந்தேன்
உங்கள் கருத்துக்களை எதிர்
பார்க்கிறேன்…………
நன்றி
வன்னியூர் கிறுக்கன்