நெருங்கிட அவலம்…
ஆண்டெட்டு நெருங்கிட அவலம் குறைந்திட
ஆற்றாமைக் காரிருள் அணுவளவு அகன்றிட
மூடர் கூடத்து முகாம் சூழ்ந்திடா
முற்றப் படுகொலை முற்றும் விலகிட
காணி முழுமை காடையர் களவிடா
கன்னியர் மீண்டும் கற்பினை இழந்திடா
உற்றார் இன்றி உளமது கனன்றிடா
உளவியல் தாக்கு உறுதி குலைத்திடா
கற்றலின் சிந்தை கடுசாய் குறைந்திடா
கல்வித் தரமோ காலடி வீழ்ந்திடா
கைம்பெண் கதறல் காற்றினைக் கிழித்திடா
கைத்தடி மூத்தோர் கலங்கித் தவித்திடா
அன்னையர் பலரும் அருமகன் தேடிடா
அருள்வாய் மலரா அகந்தை சாடிட
சிங்கள நரியோர் சூழ்ச்சியில் உலவிடா
சிறார் கொடுமை சிறிதும் குறைந்திட
தனிப்பெரும் நீதி தானாய் கிடைத்திட
தமிழர் சிறையின் தாழ்ப்பாள் விலகிட
மாந்தர் நேயம் மண்ணுள் மலர்ந்திட
மழலையர் பலரும் மகிழ்வை அறிந்திட
குவலயம் உணர்த்தி கொடுமை தடுத்திட
கனலாய் எரிந்து காரியம் முடிடா
புலிப்படை தூற்றாப் புவியைப் படைடா
பரந்த நல்லீழம் பாரினில் படைடா
– தம்பியின் தம்பி