19.12.2017 முதல் 28.03.2020 வரை
இந்த சனிப்பெயர்ச்சியில், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களால் நன்மை அடைவீர்கள். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சேமிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் முற்றிலும் நீங்கும். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். கடனாகக் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்துசேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்னையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். என்ன நடக்குமோ என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், எட்டி இருந்து பழகுவதே நல்லது. சகஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனை அதிகரித்துக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். சமயோசித புத்தியால் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள்உண்டாகாது.
அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். முயற்சிகள் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர் ஆதரவுடன் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சிறப்பு பரிகாரம்:
அரளிப்பூ மாலையை அருகிலிருக்கும் சிவனுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சிவாய நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.