
யாழ்.பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் புலம்பெயர் ஆற்றுகைக் குழுவான “நம் கலை” ஆற்றுகை குழுவைச் சேர்ந்தவரும் அமெரிக்க வடகரோலினா பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் மண் சுமந்த மேனியர் ஆற்றுகையாளருமான செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஞானசேகரன் மகிஷன் ஆகியோர் இவ்அரங்கச் சந்திப்பில் சிறப்பு அதிதிகளாகப் பங்கு கொள்ளவுள்ளனர். மகிஷன் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் நேரடியாக சந்தித்து மாணவ தலைமைத்துவம், சமூகநல செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு போன்ற பல முக்கிய விடயங்களைப்பற்றி கலந்துரையாடியுள்ள முதலாவது ஈழத் தமிழ் மாணவன் ஆவார்.

எனவே ஈழத் தமிழ் தேசிய அரங்கு தொடர்பாக ஆர்வமுள்ள கலைஞர்கள், அரங்கத்துறை மாணவர்கள், படைப்பாளிகள் அனைவரையும் குறித்த
இச்சந்திப்பில் கலந்து கொள்ளும்படி பண்பாட்டு மலர்ச்சி கூடத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.