ஆண்டாண்டு
காலமாய் நாம் வாழ்ந்த
பூமி ஜயா
எங்கட மயிலிட்டி
சின்னவயதில்
சந்தோசமாய் கூடிக்குலாவி
மகிழ்ந்திருந்தோம்
ஒரு கூட்டு குருவிகளாய்
சுதந்திர வானில்
சிறகடித்தோம்
ஒருகாலம்
என்னதான் இருந்தாலும்
எங்கட பிறந்த
வளர்ந்த ஊரைப் போல
வருமா?
எப்போதான் நாம்
ஊருக்கு போவம்
யாரிட்ட சொல்லி அழ
எந்தன் ஊர் மணல் வெளில
கால்பதிச்சு நடக்க
எவ்வளவு ஆசை
முடியவில்லையே…
எங்கட ஊருக்கு வரும்
காக்கையினத்தோட
சேர்ந்து சாப்பிடஆசை
பனைமரங்களும்
பூவரசுகளும்
எங்கள் வருகைக்காக
காத்திருக்கக்கூடும்
எப்பதான் ஊருக்கு
போவம்?
என்ர உடம்பு கட்டையில
போனாலும்
அது மயிலிட்டி மண்ணிலதான்
எரியோணும்
ஆ.முல்லைதிவ்யன்