இலங்கை முழுவதுமாக கடந்த சித்திரை மாதத்தில் நடந்த கணக்காளர் சேவைப் பரீட்சையில் 70விழுக்காடு தமிழர்கள் சித்தியடைந்திருந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக அது இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பரீட்சை மண்டபத்தில் முறைகேடுகள் நடந்ததால் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என இலங்கை கல்வி அமைச்சர் பொது நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையினில் மீண்டும் வரும் தை மற்றும் மாசி மாதங்களில் இப் பரீட்சை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பத்திரிகைகளினில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
120 தமிழ் மாணவர்கள் ஒரே தடவையில் பொறியியல்துறைக்கு சிந்தியடைந்த காரணத்துக்காக 1971 இல் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது.
அதேபோன்று அதிகளவான தமிழர்கள் சித்தியடைந்த காரணத்துக்காக கணக்காளர் பரீட்சை பெறுபேறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ் கல்வியியலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.